நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்குவதில்லை.,அவர்களை உருவாக்குகிறோம்: ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சூப்பர் ஸ்டார்களை நாங்கள் உருவாக்குகிறோம் என ஃபீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்
நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8வது தோல்வியை சந்தித்ததால், ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
எனினும் பல ஆண்டுகளாக, இளம் திறமைகளை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அறியப்படுகிறது.
அதற்கு உதாரணமாக நடப்பு சீஸனிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அளித்தது. அவரும் 35 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் (Dishant Yagnik), "பல ஆண்டுகளாக ஒரு புதிய வீரர் எங்கள் அணியில் நுழைந்தபோதெல்லாம், அவர்கள் ஏற்கனவே நட்சத்திரங்களாக இல்லை.
அவர்கள் எங்கள் உரிமையில் நட்சத்திரங்களாக மாறினர். தற்போதைய குழு, அவர்கள் நட்சத்திரங்களாக மாறுவார்கள் என்று நம்புகிறோம்.
நாங்கள் அவர்களை நட்சத்திரங்களாக ஆக்குவோம். நாங்கள் சூப்பர் ஸ்டார்களை வாங்குவதில்லை, நாங்கள் சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறோம், அதுதான் எங்கள் tagline" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |