சென்னை சூப்பர் கிங்க்ஸை நொறுக்கிய தமிழக வீரர் அஸ்வின்! ராஜஸ்தான் வெளியிட்ட பதிவு
தமிழக வீரர் அஸ்வினின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு சேப்பாக்கம் மைதானத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி
ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
How we feeling, #RoyalsFamily? pic.twitter.com/yztqXEorrn
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2023
ராஜஸ்தான் அணி துடுப்பாடியபோது களமிறங்கிய அஸ்வின் 22 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார். மேலும் அவர் பந்து வீசியபோது 25 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவர் அதிரடியில் மிரட்டக்கூடிய தூபே மற்றும் கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய ரஹானே ஆகிய இருவரையும் lbw முறையில் வெளியேற்றினார்.
What it means. ??? pic.twitter.com/I3Xjbzzf5l
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2023
அஸ்வினை கொண்டாடும் RR
இதன்மூலம் சென்னை அணி பெரும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அஸ்வினை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வினின் புகைப்படத்தை பகிர்ந்த ராஜஸ்தான் அணி, அவர் சேப்பாக்கம் மைதானத்தை நொறுக்கியதாக குறிப்பிட்டுள்ளது.
Chepauk jinx broken! ??
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2023