முதல் முறையாக ஐபிஎல்லில் களமிறங்கும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்! ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்ட புகைப்படம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட்டை தங்கள் அணிக்கு வரவேற்பதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
ஏப்ரல் 23ஆம் திகதி பெங்களூருவில் நடக்க உள்ள போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது.
@AFP
ஜோ ரூட்டிற்கு வரவேற்பு
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், மிரட்டலான துடுப்பாட்ட வீரருமான ஜோ ரூட் ஒரு கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் இதுவரை எந்தப் போட்டியிலும் களமிறக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜோ ரூட்டை அணிக்கு வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் ஜோ ரூட் உடன் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம்பெற்றுள்ளார். இந்த பதிவுக்கு ராஜஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
@rajasthanroyals (Twitter)
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக களமிறங்கும் ஜோ ரூட், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 32 போட்டிகளில் 893 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
@Rajasthan Royals