விவசாயியின் வங்கிக்கணக்கில் திடீரெனெ டெபாசிட் ஆன ரூ.1.கோடி.., அடுத்து நடந்த விடயம்
விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டெபாசிட் ஆன ரூ.1.கோடி
தமிழக மாவட்டமான தேனி, உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34).
இவருக்கு கேரள மாநிலத்தில் 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் உள்ளது. இந்நிலையில், இவருக்கு தேனி வருமான வரித்துறையின் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது.
அதில், உங்களுடைய வங்கிக்கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது எனவும், அதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், விவசாயி மணிகண்டன் தனது வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது ரூ.1.கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற அவர் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |