மாதம் ரூ.12,000 ஓய்வூதியம்! LIC -ன் சூப்பர் பாலிசி
மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் பெறும் எல்.ஐ.சியின் பாலிசியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எல்ஐசி பாலிசி
மக்களின் காப்பீடு மற்றும் முதலீடு ஆகியவற்றை கருத்தில் வைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி கொண்டிருக்கிறது.
அதில், அரசு ஊழியர்களை போல தனியார் ஊழியர்களும் ஓய்வூதியம் பெறும் வகையில் சிறப்பு திட்டங்களை கொண்டு வருகிறது. அதே போல், எல்ஐசி திட்டம் மூலம் நாம் எதிர்காலத்திற்கான வருமானத்தையும் சேமித்து வைக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் எல்ஐசி, அனைத்து தரப்பட்ட பிரிவினருக்கும் பல பாலிசி திட்டங்களை கொண்டுள்ளது.
எல்.ஐ.சி. சரல் பென்ஷன் திட்டம்
எல்.ஐ.சி கொண்டு வந்த சிறந்த திட்டம் தான் எல்.ஐ.சி. சரல் பென்ஷன் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 ஓய்வூதியமாக பெறலாம். இதற்கு நாம் ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்த வேண்டும்.
60 வயதில் நாம் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். அப்போது ஆண்டுக்கு ரூ.58,950 ஓய்வூதியம் கிடைக்கும். இந்த பலனை வாழ்நாள் முழுவதும் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.12,000 பெறலாம்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த எல்.ஐ.சி. சரல் பென்ஷன் திட்டத்தினை விண்ணப்பிக்க ஆஃலைன் மற்றும் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். அதிக முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
மேலும், 40 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த திட்டம் பொருந்தும். அதே போல், பாலிசிதாரர் இந்த பாலிசியை தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |