பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4000: ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் உணவு முதற்கட்டமாக ரூ.2500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவை தேர்தல்
தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் திகதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் இரண்டு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகின்றன.
ராகுல் காந்தி கூறுகையில்..
நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி '' தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊழல் செய்து கொள்ளையடித்து பெரும் சொத்து சேர்த்துள்ளார். அவரது ஊழலால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை சரி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்கும் முடிவு செய்துள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் பெற்று பயனடைவார்கள். இதன் முதற்கட்டமாக மாதம் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும்.
சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ.1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் மக்களின் அரசு.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 1 லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார்'' என முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |