மணப்பெண் தோழியாக வர ரூ.70,000 வேண்டும்.., நீண்ட கால தோழி கோரிக்கை
மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு வர வேண்டும் என்று தனது நீண்ட கால தோழிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ரூ.70000 வேண்டும்
திருமணம் முடிவானதும் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குடும்பத்தினர் கொடுப்பார்கள்.
அந்தவகையில், திருமணத்திற்கு வர வேண்டும் என்று தனது நீண்ட கால தோழிக்கு மணப்பெண் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு, தனக்கு துணையாக மணப்பெண் தோழியாக வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பின்னர், ஒருவாரம் கழித்து தோழியிடம் இருந்து மணப்பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நான் மணப்பெண் தோழியாக வருவதற்கு உடை, சிகை அலங்காரம், மணப்பெண்ணுக்கான பரிசு, விருந்துக்கான வைப்புத்தொகை மற்றும் இதர செலவுகளுக்கான தொகை வேண்டும்.
அதாவது, திருமணத்திற்கு வருவதற்கு ரூ.70 ஆயிரம் அனுப்பினால் பங்கேற்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மணப்பெண் தன்னுடைய நிலையை விளக்கியும் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் இதுகுறித்த கருத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் மணப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பரவி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |