திடீரென Kotak Bank வங்கிக்கணக்கில் கிரெடிட் ஆன ரூ.756 கோடி: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
கோட்டக் மஹேந்திரா வங்கி வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக்கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக்கணக்கில் இருந்த ரூ.756 கோடி
தமிழக மாவட்டம், தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கோட்டக் மஹேந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இவர், நேற்று தனது நண்பருக்கு ரூ.1,000 அனுப்பியுள்ளார். பின்பு, பேலன்ஸ் தொகை எவ்வளவு இருக்கிறது என்று மெசேஜ் வந்துள்ளது.
அப்போது, அவருடைய வங்கிக்கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக காட்டியுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வங்கி விளக்கமளிக்கவில்லை
இந்த சம்பவம் இரவு நேரம் நடந்தது என்பதால், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு, காலையில் வங்கி மேலாளரை சென்று சந்தித்த போது கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தியையும், மொபைல் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
இது என்ன விஷயம் என்று கண்டறிந்து தொடர்பு கொள்வதாக கூறி வாடிக்கையாளர் கணேசனை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இதுவரை வங்கி தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக, சென்னையில் வாடகை கார் ஓட்டிவரும் டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில், கடந்த செப்டம்பர் 9 -ம் திகதி மாலை 3 மணி அளவில் ரூ.9 ஆயிரம் கோடி தவறுதலாக டெபாசிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |