ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்.., ED -ல் சிக்கிய அடுத்த திமுக புள்ளி
அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பியான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜெகத்ரட்சகனுக்கு அபராதம்
அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பியாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். இவர், சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை வாங்கி தன்னுடைய மனைவி, மகன் மற்றும் மகள் பெயர்களில் மாற்றியுள்ளார்.
இந்த பண பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாக ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை திடீரென நடத்திய சோதனையில் ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் கீழ் ஜெகத்ரட்சகன் வாங்கிய பங்குகளில் விதிமீறல் நடந்துள்ளது.
இதனால், சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது.
மேலும், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 26 -ம் திகதி வெளியிடப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |