பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வீடியோ
செந்தில் பாலாஜி கைது தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டதை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் திமுக அரசு குறித்து குற்றச்சாட்டுகளையும், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில், திமுக-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேர்காணலில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்துள்ளார்.
நேர்காணலில் விளாசிய ஆர்.எஸ்.பாரதி
எடப்பாடி பழனிசாமி, மாரடைப்பு எப்படி வரும் என்று கூற தெரியாமல் உள்ளார் என்று விளாசியுள்ளார். அதேபோல் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவது என்றால் பதறிப்போய் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எங்கள் தலைவரை பற்றி எடப்பாடி கேவலமா பேசுகிறார். ஆனால் அவரோ பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சும் பேசுபவர்.
எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |