லொட்டரியில் ஒரே ஒரு எழுத்தால் ரூ.12 கோடியை இழந்தவர்.., கடைசியில் ரூ.1 லட்சம் விழுந்ததையும் கவனிக்கல
கேரளா விஷு பம்பர் லொட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடியை ஜஸ்ட் மிஸ்ஸில் இழந்தவர், தனக்கு ரூ.1 லட்சம் விழுந்ததையும் கவனிக்காமல் இருந்துள்ளார்.
லொட்டரியில் ரூ.12 கோடி
இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா வீடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வம்பரன். ஓய்வு பெற்ற மத்திய காவல்படை வீரரான இவர், தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் வாங்கிய VC 490987 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி கிடைத்துள்ளது. இவர் வாங்கிய 2 பம்பர் லொட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு தான் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்நிலையில், சீரியல் எண் வித்தியாசத்தில் 12 கோடி ரூபாயை நூலிழையில் இழந்த நபர் ஒருவர் தனக்கு ரூ.1 லட்சம் விழுந்ததையும் கவனிக்காமல் இருந்துள்ளார்.
யார் அவர்?
கேரளாவைச் சேர்ந்த மோனச்சன் என்பவர் VA 490987 என்ற டிக்கெட் எண் கொண்ட விஷு பம்பர் லொட்டரியை வாங்கியுள்ளார்.
ஆனால் முதல் பரிசு வென்ற எண் VC 490987 ஆகும். இதில் சீரியல் நம்பர் மட்டுமே வேறுபட்டுள்ளது. ஆனால், மோனச்சனுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் கிடைத்துள்ளது.
இதனை அவர் கவனிக்காமல் கடைசி நான்கு இலக்கங்களுக்கு 500 ரூபாய் பரிசு கிடைத்ததை கண்டுபிடித்துள்ளார். அதாவது, தனக்கு சிறிய பரிசுத்தொகைகள் மட்டுமே கிடைக்கும் என்று அதனை மட்டும் தேடியுள்ளார்.
பின்னர், தும்பளியில் உள்ள மாதா லொட்டரி ஏஜென்சிக்கு சென்று டிக்கெட்டை கொடுத்துவிட்டு 500 ரூபாயை வாங்கியுள்ளார். இதனை லொட்டரி ஏஜெண்டும் கவனிக்கவில்லை.
இதையடுத்து, காலாவூரில் உள்ள மொத்த விற்பனை முகவர் ஒருவர், முதல் பரிசான லொட்டரி டிக்கட் எண்ணுடன் சீரியல் நம்பர் மட்டுமே வேறுபட்டு இருப்பதை கண்டறிந்தார்.
பின்னர் இது குறித்து மாதா லொட்டரி ஏஜெண்டுக்கு தெரியப்படுத்தினார். உடனே, மோனச்சனை கண்டுபிடித்த லொட்டரி ஏஜெண்ட், அவருடைய VA 490987 என்ற டிக்கெட்டை அவரிடம் கொடுத்தார்.
பரிசுத் தொகை ரூ.1 லட்சம் என்பதால் லொட்டரி அலுவலகம் மூலம் மட்டுமே தொகையை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |