12 ரூபாயுடன் நகரத்துக்கு ரயில் ஏறிய நபர்: இன்று 15,000 கோடிக்கு அதிபதி
தனக்கு 12 வயது இருக்கும்போது பாக்கெட்டில் 12 ரூபாயுடன் தன் கிராமத்திலிருந்து ரயில் ஏறிய ஒருவர், இன்று சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
15,000 கோடிக்கு அதிபதி
குஜராத்திலுள்ள துதாலா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் Savji Dholakia. தனக்கு 12 வயது இருக்கும்போது பாக்கெட்டில் 12 ரூபாயுடன் தன் கிராமத்திலிருந்து சூரத் நகருக்கு ரயில் ஏறியுள்ளார் அவர்.

தன் உறவினர் ஒருவரிடம் கடன் வாங்கி ஹரி கிருஷ்னா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்னும் நிறுவனத்தைத் துவக்கிய Dholakia, தன் கடின உழைப்பால் அதை 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.
விடயம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடையும் குணம் கொண்டவர் Dholakia.
தன் நிறுவன ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு, கார் மற்றும் நகைகளை பரிசாக கொடுப்பது Dholakiaவின் வழக்கம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் சொந்த வீடும் காரும் இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம், அதனால்தான் அவர்களுக்கு வீடு மற்றும் கார் வழங்க முடிவுசெய்தோம் என்கிறார் அவர்.

Dholakia, 50 ஏக்கர் பரப்பிலான வீடு ஒன்றில் தன் குடும்பத்தினர் 64 பேருடன் வாழ்கிறார். மூன்று தலைமுறையினர் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள்.
வாங்குவதை விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி என்று கூறும் Dholakia, தன் லாபத்தில் கொஞ்சம் குறையும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, மேஜிக் நடக்கும் என தான் நம்புவதாக கூறுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |