மொத்த சொத்துமதிப்பு ரூ 12,46,575 கோடி... 99 சதவிகிதத்தையும் நன்கொடையாக அளிக்க முடிவு செய்த நபர்
ரத்தன் டாடா, பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி போன்றவர்கள் தங்கள் சொத்தில் ஒருபகுதியை நன்கொடையாக அளிக்க உறுதி செய்துள்ள பெரும் கோடீஸ்வரர்கள்.
150 பில்லியன் டொலர்
தொடர்ச்சியாக தங்கள் சொத்தில் தாராளமான பங்கை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தும் வருகின்றனர். ஆனால், பிரபலமான ஒரு தொழிலதிபர், தனது வாழ்நாளில் தனது சொத்தில் பெரும்பகுதியை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அவர் அமெரிக்க பெரும் கோடீஸ்வரரான Warren Buffett. அவரது மொத்த சொத்து மதிப்பு 150 பில்லியன் டொலர். Warren Buffett இதுவரை பில்லியன் கணக்கான டொலர் தொகையை தமது குடும்பத்தின் அறக்கட்டளைக்கும் பில் கேட்ஸ் உருவாக்கியுள்ள அறக்கட்டளையும் நன்கொடையாக அளித்துள்ளார்.
ஆனால் மிக சமீபத்தில் Warren Buffett மிக முக்கியமான முடிவை அறிவித்து, பல பேர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதாவது தமது மூன்று பிள்ளைகள் முன்னெடுத்துவரும் அறக்கட்டளைக்காக 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.
உயிலில் புதிய திருத்தம்
தமது நிறுவனமான Berkshire Hathaway பங்குதாரர்களுக்கு அவர் எழுதிய 4 பக்க கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது உயிலில் புதிய திருத்தம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
அதில், தமது மரணத்திற்கு பின்னர் மொத்த சொத்தில் 99.5 சதவிகிதமும் நன்கொடையாகவே அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மூன்று அறங்காவலர்களையும் நியமித்துள்ள அவர், தமது பிள்ளைகளுக்கு தர வேண்டிய சொத்துக்களை அவர்களுக்கு அளித்துள்ளதாகவும், எஞ்சிய ரூ 12,46,575 கோடி சொத்தில் மொத்தவும் நன்கொடையாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |