100 நாள் வேலைக்காக ஆண்கள் சிலர் பெண்கள் போல சேலை கட்டி வந்ததால் ரூ.3 லட்சம் மோசடி
100 நாள் வேலை திட்டத்தில் ஆண்கள் சிலர் சேலை கட்டி பெண்கள் போல வந்து ஏமாற்றியதால் ரூ.3 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.3 லட்சம் மோசடி
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் எனும் 100 நாள் வேலைத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை செய்து பயனடைகின்றனர்.
இதில், மாநிலத்திற்கு மாநிலம் ஊதியம் வேறுபடும். இந்நிலையில் தான் கர்நாடகா மாநிலத்தில் ஆண்கள் சிலர் சேலை கட்டி பெண்கள் போல வந்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவின் யாதகிர் மாவட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்திற்கு பெண்களும் வந்திருப்பதாக காட்டுவதற்கு சில ஆண்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் சேலை கட்டி பெண்கள் போலவே வந்து வேலை தொடர்பான கணக்கெடுப்பில் தங்களது புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். இதனால் சுமார் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |