RTGS சேவை பற்றிய முழு விவரங்கள்.., எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
RTGS சேவையின் மூலம் பணத்தை எவ்வளவு அனுப்பலாம், எவ்வளவு நேரத்தில் அனுப்பலாம், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
RTGS சேவை
பொதுவாக ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணத்தை அனுப்புவது என்பது எளிதான விடயம். ஆனால், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு அனுப்புவது என்பது சற்று தாமதமான செயலாகும்.
அதற்கு நாம் ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் என்இஎப்டி (NEFT) என்ற சேவையின் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதில் நாம் RTGS சேவையை பற்றி பார்க்கலாம்.
RTGS (Real Time Gross Settlement) சேவை மூலம் நீங்கள் பணத்தை மற்றவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். இந்த சேவை என்பது இந்திய வங்கி துறைக்கு பெரிய மைல்கல்லாக உள்ளது.
இந்த சேவையானது வங்கியின் வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 24 மணி நேரமும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எவ்வளவு பணம் அனுப்பலாம்?
* ரூ.2 லட்சத்திற்கு மேல் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு RTGS சேவை மூலம் அனுப்பிக் கொள்ளலாம்.
* RTGS சேவை மூலம் ஒரே வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு அனுப்புவதற்கு கட்டணம் கிடையாது.
* ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு அனுப்புவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு கட்டணம்?
* ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பிற வங்கிக் கணக்குக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை பணம் அனுப்ப ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அதே போல ரூ.5 லட்சத்திற்கு மேல் அனுப்ப ரூ.55 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |