கையும் களவுமாக சிக்கிய சுவிட்சர்லாந்து... நடுநிலை வேஷம் கலைந்தது
உக்ரைன் ரஷ்யப் போர் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக சுவிட்சர்லாந்து கூறிவந்த நிலையில், கையும் களவுமாக சிக்கியதைத் தொடர்ந்து, அதன் வேஷம் கலைந்துள்ளது.
கையும் களவுமாக சிக்கிய சுவிட்சர்லாந்து
சுவிஸ் அரசுக்கு சொந்தமான ஆயுத தயாரிப்பு ஒப்பந்ததாரரான RUAG என்னும் நிறுவனம், கவச வாகனங்களை ஜேர்மனிக்கு விற்க முயன்றது தெரியவந்துள்ளது.
ஜேர்மனி வாயிலாக உக்ரைனுக்கு அந்த ஆயுதங்களை வழங்குவது அந்நிறுவனத்தின் திட்டம். அவற்றில் 96 Leopard வகை கவச வாகனங்களும் அடக்கம்.
அந்த கவச வாகனங்களில் ஜேர்மன் நிறுவனம் ஒன்று சில மாற்றங்கள் செய்து, பின் உக்ரைனுக்கு வழங்குவதுதான் திட்டம்.
ஆக, ஒருபக்கம் சுவிட்சர்லாந்து உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆயுத தயாரிப்பு நிறுவனமே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முயன்றுள்ள விடயம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் வெளியானதும், சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |