முதல் ஓவரிலே 3 பேரை டக் அவுட் ஆக்கி மிரட்டிய நமீபியா! ஸ்காட்லாந்தை கடைசி ஓவரில் துரத்தி அடித்து அபார வெற்றி
உலகக்கோப்பை டி20 தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் நமீபா அணி அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய இரண்டாவது போட்டியில் கத்துக் குட்டி அணிகளான ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் துவக்க வீரரான ஜார்க் முன்சீ(0), காலம் மேக்லியாட்(0), ரிச்சி பெரிங்டன்(0) ஆகியோரை நமீபியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் Ruben Trumpelmann அடுத்தடுத்து வீழ்த்தி கடும் அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பின் நமீபியா அணியால் எழவே முடியவில்லை. அடுத்தடுத்து வந்த் வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஒரு புறம் சிறப்பாக ஆடி வந்த மற்றொரு துவக்க வீரர் மேத்யூ க்ரோஸ் 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தி வந்த Michael Leask 27 பந்தில் 44 ஓட்டங்கள் எடுக்க இறுதியாக ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்தது.
நமீபியா அணியில் அதிகபட்சமாக Ruben Trumpelmann 4 ஓவரில் 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கு துவக்க வீரர்களான Craig Williams 18 ஓட்டங்களிலும், Michael van Lingen 18 ஓட்டங்களிலும் வெளியேற, இவர்களைத் தொடர்ந்து Zane Green(9), Gerhard Erasmus(4) அடுத்தடுத்து வெளியேற, இருப்பினும் கடைசி கட்டத்தில், David Wiese மற்றும் JJ Smit நமீபியா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
David Wiese 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இறுதியாக நமீபியா அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் 115 ஓட்டங்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
JJ Smit கடைசி வரை ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 32 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.