இப்படி விளையாடினா யாருக்கு தான் பயம் வராது! வெற்றிக்கு பின் CSK வீரரை புகழ்ந்து தள்ளிய சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணியின் இளம் வீரரை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.
அந்தணியின் துவக்க வீர்ரான ருத்துராஜ் கெய்க்வாட் 60 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். சென்னைக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ராஜஸ்தான் அணியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர யாஷாவி ஜெய்ஸ்வால் 21 பந்தில் 50 ஓட்டங்களும், ஷிவம் துபே 42 பந்தில் 64 ஒட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இந்நிலையில், இந்த போட்டியின் முடிவுக்கு பின் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட், விளையாடியதை பார்க்கும் போது நம்ப முடியாத வகையில் இருந்தது.
அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் போது நிச்சயம் பயம் இருக்கும். இதே போன்று அவர் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் அனைத்து எதிர் அணிகளுக்கும் அந்த பயம் இருக்கும்.
அவர் மிகவும் அற்புதமான ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரன்களை சேர்க்கிறார்.
இந்த போட்டியில் அவர் சதம் அடித்தது ஒரு நல்ல இன்னிங்ஸ். அவரது பேட்டிங்கிற்கு நாம் மரியாதை கொடுத்தாக வேண்டும் என்று கூறினார்.