மன்னருடைய உருவப்படம் பொறித்த கரன்சி அறிமுகம்: பழைய நோட்டுகளை என்ன செய்வது?
மன்னர் சார்லசுடைய உருவப்படம் பொறித்த பிரித்தானிய கரன்சி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய 5, 10, 20 மற்றும் 50 பவுண்டு நோட்டுகள் இம்மாதம் அதாவது, ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
நோட்டுகளை மாற்ற மூன்று வார கால அவகாசம்
மன்னருடைய உருவப்படம் பொறித்த புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ள மூன்று வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல், 30ஆம் திகதி வரை மகாராணியரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நோட்டுகளைக் கொடுத்து மன்னர் உருவப்படம் பொறித்த நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம். என்றாலும், அதிகபட்சமாக 300 பவுண்டுகள் பதிப்பிலான கரன்சி நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Yui Mok/PA Wire
பழைய நோட்டுகள் என்ன ஆகும்?
இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் உருவப்படம் பொறித்த கரன்சி நோட்டுகளும், மன்னருடைய உருவப்படம் பொறித்த நோட்டுகளுடன், தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும். புது நோட்டுகளை பெற விருப்பமுள்ளவர்கள் 300 பவுண்டுகள் மதிப்பிலான கரன்சி நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
Yui Mok/PA Wire
தேவை ஏற்பட்டாலோ அல்லது புழக்கத்திலிருக்கும் நோட்டுகள் பழமையாய்ப் போனாலோ மட்டுமே புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படும். புது நோட்டுகளை அச்சிடுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியான தாக்கங்களை குறைப்பதற்காக ராஜ குடும்பம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |