வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன?
பெற்றோரின் குடியுரிமை, பிள்ளைகள் பிறந்த இடம் ஆகியவற்றைப் பொருத்து, பிள்ளைகள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கு வெவ்வேறு வகையான விதிமுறைகள் உள்ளன.
அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...
1. ஜேர்மன் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் குடியுரிமை
ஒரு குழந்தையின் தந்தையோ அல்லது தாயோ ஜேர்மன் குடிமகனாக/குடிமகளாக இருக்கும் பட்சத்தில், அல்லது இருவருமே ஜேர்மன் குடிமக்களாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை பிறப்பிலேயே ஜேர்மன் குடிமகனாக/குடிமகளாக ஆகிவிடுகிறது.
2. ஜேர்மன் குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள்
1999 டிசம்பர் 31க்குப் பின் வெளிநாட்டில் பிறந்த ஜேர்மானியர்களுக்கு, வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், ஓராண்டுக்குள் ஜேர்மன் பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை தானாகவே கிடைக்கும். அந்தக் குழந்தைகளின் பெற்றோர், 1999 டிசம்பர் 31க்கு முன் /ஜேர்மன் பிராந்தியத்திற்குள் பிறந்திருந்தால், தானாகவே அந்தக் குழந்தைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை கிடைத்துவிடும்.
3. தத்தெடுத்தல் மூலம் குடியுரிமை
தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோர்களில் ஒருவராவது, அந்தக் குழந்தையைத் தத்தெடுக்கும் நேரத்தில் ஜேர்மன் குடிமகனாக /குடிமகளாக இருந்திருந்தால், சட்டப்படி தத்தெடுக்கப்படும் அந்தக் குழந்தை 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், அதற்கு தானாகவே ஜேர்மன் குடியுரிமை கிடைத்துவிடும்.
4. ஜேர்மனியில் பிறந்தபின் குடியுரிமை
2000ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், The principle of place of birth என்னும் கொள்கையின்படி, ஜேர்மனியில் பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோரில் இருவருமே ஜேர்மன் குடியுரிமை கொண்டவர்கள் அல்ல என்றாலும், சில நிபந்தனைகளின் பேரில் அந்தக் குழந்தை ஜேர்மன் குடிமகனாக /குடிமகளாக ஆகலாம்.
5. குடியுரிமைக்கு விண்ணப்பித்து naturalisation மூலம் குடியுரிமை பெறுதல்
ஜேர்மன் குடிமக்களுக்குப் பிறக்காத, அல்லது, ஜேர்மனியில் பிறக்காத பிள்ளைகள் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, naturalisation மூலம் குடியுரிமை பெறலாம்.