ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? அப்போ கண்டிப்பா இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் நமக்கு வந்தடைகின்றன.
மத நம்பிக்கைகளின்படி, ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
சாஸ்திரத்தில், ருத்ராட்சத்தை அணிபவரின் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறுவதாக கூறப்படுகின்றன.
அந்தவகையில், ருத்ராட்சம் அணியும்போதும், அணிந்த பிறகும் சில விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமானது.
ருத்ராட்சம் அணிவதற்கான சில விதிமுறைகள்
சில இடங்களில் ருத்ராட்சத்தை அணியக்கூடாது என்பது ஐதீகம். அவை எந்தெந்த இடங்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும் போதோ எக்காரணம் கொண்டும் ருத்ராட்சத்தை அணியக் கூடாது.
- இறைச்சி மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளும் இடத்திற்கு ருத்ராட்சம் அணிந்து செல்லக்கூடாது.
- பிறந்த குழந்தை இருக்குமிடம் அல்லது பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.
- தூங்கும்பொழுதும், படுக்கையறையிலும் கூட ருத்ராட்சத்தை அணியக்கூடாது.
இந்த நான்கு இடங்களில் ருத்ராட்சம் அணிவதால் வாழ்க்கையில் தொல்லை ஏற்படும்.
ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள், இதனை உணர்வுப்பூர்வமாக அறியலாம்.
ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு.
மேலும், பல வகையான வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒரு போதும் யமலோகம் செல்வதில்லை என்பது நம்பிக்கை.
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது, திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
மேலும் ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை என்பது நம்பிக்கை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |