பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழ்பவர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவருவதற்கான விதிமுறைகள்...

France
By Balamanuvelan Jan 16, 2024 10:21 AM GMT
Report

பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் உறவினர்களை பிரான்சுக்கு அழைத்துவர அனுமதி உள்ளதா? அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குமான விதிகள், கிட்டத்தட்ட எல்லா வகையிலும் வித்தியாசமானவை என்பதை மனதில் கொள்வது நல்லது. குறிப்பாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு, அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரித்தானியர்களுக்கான விதிகள் மாறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

ஆக, ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், ஐரோப்பிய பொருளாதார மண்டல நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் சுவிஸ் குடிமக்களைப் பொருத்தவரை, அவர்கள் பிரான்சுக்கு வரவும், அங்கு வாழ்வும், வேலை செய்யவும், தடையில்லா போக்குவரத்து விதிகள் சாதகமாக உள்ளன.

பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழ்பவர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவருவதற்கான விதிமுறைகள்... | Rules For Bringing Relatives Of Living In France

Photo by FADEL SENNA / AFP)

ஆனால், பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலான மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அப்படியல்ல. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரான்ஸ் குடிமக்களை திருமணம் செய்திருந்தால், அவர்கள் கணவன் அல்லது மனைவிக்கான விசா பெற்று, தன் துணையுடன் பிரான்சில் வாழலாம்.

வெளிநாட்டவர்கள் பிரான்சில் நீண்ட காலம் தங்குவதற்காக பல வகை விசாக்கள் உள்ளன என்றாலும், இந்த செய்தி, பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை பிரான்சில் வாழ அழைத்துவருவதைக் குறித்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Regroupement familial

பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் ஒருவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர், விசா பெற்று, அவருடன் பிரான்சில் குடியமர விரும்பும் நிலையில், அதற்கான நடைமுறை, Regroupement familial என அழைக்கப்படுகிறது. இதைப்போலவே, இன்னொரு நடைமுறை உள்ளது, அதன் பெயர் réunification familiale என்பதாகும். அது, நாடற்றோர் அல்லது அகதி நிலை பெற்றோருக்கானதாகும். ஆகவே, இந்த இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

இந்த Regroupement familialஐப் பொருத்தவரை, பிரான்ஸ் விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட, கணவன் அல்லது மனைவி, மற்றும் 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகள், ஆகியோர்தான் குடும்பத்தினர் என்ற வரையறையின்கீழ் வருவார்கள்.

பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் வெளிநாட்டவர்கள், இந்த குடும்பத்தினரை இந்த Regroupement familial விதியின் கீழ் பிரான்சுக்கு அழைத்துவருவதற்காக தனிப்பட்ட விதிகள் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளையும், வயதான தங்கள் பெற்றோரையும் அவர்கள் பிரான்சுக்கு அழைத்துவர விரும்பினால் அதற்கான விதிமுறைகள் வேறு.

பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழ்பவர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவருவதற்கான விதிமுறைகள்... | Rules For Bringing Relatives Of Living In France

பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவர வேண்டுமென்றால், அவர்கள் 10 வருட குடியிருப்பு அட்டை அல்லது ஓராண்டுக்கும் மேலான குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்களானால், குறைந்தபட்சம் 18 மாதங்கள் பிரான்சில் வாழ்ந்திருக்கவேண்டும்.

இலையென்றால், அவர்களுடைய குடும்பத்தினர் நீண்ட கால சுற்றுலா விசாவில் பிரான்சுக்கு வரலாம்.

இன்னொரு முக்கிய விடயம், 2020, டிசம்பர் 31க்கு முன், அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பிலிருந்தே பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர்களுக்கான விதிமுறைகள் சற்று வித்தியாசமானவை என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US