பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கான விதிமுறைகள்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணிப்பதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்...
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான விதிகள் முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வர எந்த தடையும் இல்லை.
பிரான்சுக்கு வருவதற்கு நீங்கள் அத்தியாவசிய காரணம் ஒன்றை தெரிவிக்கவேண்டிய அவசியமோ அல்லது பிரான்சுக்குள் நுழைந்ததும் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமோ இல்லை.
ஆனால், பயணம் புறப்படுவதற்கு முன்பு செய்துகொண்ட, கொரோனா பரிசோதனையில், உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும், இந்த விதிமுறை 11 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு கிடையாது.
அத்துடன், நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம், உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதுடன், கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றிய ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதைக் காட்டும் சுய விளக்கச் சான்றிதழ் ஒன்றையும் நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிகள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே நீங்கள் பிரான்சுக்குள் நுழையலாம்.
கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் சமர்ப்பிக்கவேண்டியிருக்கும், இந்த விதிமுறை 11 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு கிடையாது.
அத்துடன், உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதுடன், கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றிய ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதைக் காட்டும் சுய விளக்கச் சான்றிதழ் ஒன்றையும், ஒரு வாரத்திற்கு உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள் என்பதற்கான உறுதிமொழியையும் நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின், கொரோனா பரிசோதனை செய்து, உங்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், நீங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம்.