பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்லும் சிறுவர்களுக்கான விதிமுறைகள்
பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி பெறவேண்டுமா? ஐந்து வயது குழந்தைகள் பயணம் புறப்படும் முன்போ பிரித்தானியா சென்ற பின்போ கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்வதாக பொதுவாக கூறினாலும், நீங்கள் பிரித்தானியாவில் எந்த பகுதிக்கு செல்கிறீர்கள், இங்கிலாந்துக்கா, வேல்ஸுக்கா, வடஅயர்லாந்துக்கா, அல்லது ஸ்காட்லாந்துக்கா என்பதைப் பொறுத்து விதிமுறைகளில் சிறிது மாற்றங்கள் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் சிறுவர்களுக்கான பொதுவான விதிமுறைகள்
- பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்வோர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் என்ன அத்தியாவசிய காரணத்துக்காக பிரித்தானியா செல்கிறார்கள் என்பதைக் கூறும் படிவத்தை நிரப்பவேண்டிய அவசியம் இல்லை.
- அப்படி பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுடன் பயணிக்கும் 18 வயதுக்கு குறைவான பிள்ளைகளும் தடுப்பூசி பெற்றதாகவே கருதப்படுவார்கள்.
- அப்படி முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள், தாங்கள் என்ன அத்தியாவசிய காரணத்துக்காக பிரித்தானியா செல்கிறார்கள் என்பதைக் கூறும் படிவத்தை நிரப்பவேண்டியது அவசியம்.
- பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்குமுன், UK passenger locator form என்னும் படிவத்தை கட்டாயம் நிரப்பவேண்டும். பெற்றோர்களின் படிவத்திலேயே (18 வயதுக்கு குறைவான) பிள்ளைகள் குறித்த விவரங்களையும் நிரப்பலாம்.
இந்த விதிமுறைகள் ஆகத்து 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.
தனித்தனியே, இங்கிலாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளுக்கான விதிகளை கீழே உள்ள இணைய முகவரியிலிருந்து அறிந்துகொள்ளலாம்.