பிரித்தானியாவில் அடுத்த மாதம் முக்கிய விதி மாற்றப்படும்! சுகாதார செயலாளர் தகவல்
முகக் கவசம் அணிவது தொடர்பான விதிகள் குறித்து பிரித்தானியா சுகாதார செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முகக் கவசம் அணிவது தொடர்பான விதிகளை அடுத்த மாதம் அரசாங்கம் மாற்றலாம் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தின் நான்காவது கட்டம் ஜூன் 21 அன்று அமுலுக்கு வருகிறது.
நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக, முகக் கவசம் அணிவது தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர்கள் தெரிவித்ததாக மாட் ஹான்காக் கூறினார்.
பிரித்தானியாவில் கடந்த கோடையில் இருந்து கடைகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
.மேலும் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என பிரித்தானியா சுகாதார செயலாளர் கூறினார்.