சுரேஷ் ரெய்னாவின் மறுபிரவேசம்: CSK-க்கு மீண்டும் வருகிறாரா சின்ன தல? ரசிகர்கள் உற்சாகம்
IPL 2025-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல்-லில் சுரேஷ் ரெய்னா
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சுரேஷ் ரெய்னா ஒரு ஜாம்பவானாக விளங்கினார்.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (CSK) நம்பர் மூன்று இடத்தில் களமிறங்கி, தனது அபார பேட்டிங் திறமையால், நிலையான ஆட்டத்தாலும், அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பங்களிப்பாலும் "மிஸ்டர் ஐபிஎல்" என்றும், "சின்ன தல" என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
🚨 SURESH RAINA IN CSK🚨
— virat kohli fans (@mandhana09) February 20, 2025
- Suresh Raina fielding coach of CSK in IPL 2025.#IndvsBan #ChampionsTrophy2025 pic.twitter.com/NZJi0xSIZh
சென்னை சூப்பர் கிங்ஸுடனான (CSK) அவரது பொற் காலத்தில், ரெய்னா அணியின் முக்கிய வீரராகவும், துணை கேப்டனாகவும் திகழ்ந்தார்.
சுரேஷ் ரெய்னா கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியுடன் (MS Dhoni) இணைந்து, அணியை பல வெற்றிகளுக்கு வழிநடத்தினார்.
தனது ஓய்வுக்குப் பின்னரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அவர் வைத்திருக்கும் பாசம் குறையவில்லை. "மஞ்சள் படை" மீது தனது அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவதோடு, சென்னை ரசிகர்களுடனான பிரத்யேக மற்றும் பிரிக்க முடியாத பந்தத்தை பற்றி தொடர்ந்து உயர்வாக பேசு வருகிறார்.
மீண்டும் வருகிறாரா சின்ன தல?
சமீபத்திய சமூக ஊடக பதிவு ஒன்று, சுரேஷ் ரெய்னா 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பக்கூடும் என்ற ஊகங்களை தூண்டிவிட்டுள்ளது.
ஒரு ரசிகரின் இணையதள பதிவில், ரெய்னா அணியின் ஃபீல்டிங் கோச்சாக சேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ரெய்னா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வதந்திகளை உறுதிப்படுத்தவில்லை.
சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் சாதனைகள் அவரது திறமைக்கு சான்றாக விளங்குகின்றன.
அவர் அணிக்கு 176 போட்டிகளில் விளையாடி, 32.32 சராசரியிலும், 136.93 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 4,687 ரன்கள் குவித்துள்ளார்.
அவரது அற்புதமான ஐபிஎல் வாழ்க்கையில் 33 அரை சதங்களும், ஒரு சதம் அடங்கும்.
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக, சின்ன தலையாக, என்றென்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |