கையில் கிடைத்த ரன் அவுட்டை கோட்டை விட்ட வீரர்கள்! நொந்து போன ரூட்: வெளியான வீடியோ
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கையில் கிடைத்த ரன் அவுட்டை கோட்டை விட்டதால், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் நொந்து போன வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. நான்காம் நாளான இன்று இந்திய அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 406 ஓட்டங்கள் எடுத்து 307 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
இதில் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து 56 ஓட்டங்களுடன், ரிஷப் பாண்ட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர். இந்தநிலையில், இப்போட்டியின் போது கையில் கிடைத்த ரன் அவுட்டை இங்கிலாந்து வீரர்கள் கோட்டை விட்டனர் என்றே சொல்லலாம்.
Golden opportunity missed ?
— SonyLIV (@SonyLIV) September 5, 2021
How has Rishabh Pant survived that!?
Tune into #SonyLIV now ? https://t.co/E4Ntw2hJX5 ??#ENGvsINDonSonyLIV #ENGvIND #RishabhPant #MoeenAli pic.twitter.com/cTMrbjicTN
ராபின்சன் வீசிய பந்தை எதிர் கொண்ட ரிஷப் பாண்ட் அதை அடித்துவிட்டு ஓட முயற்சித்த போது, மறுமுனையில் இருந்த ஷர்துல் தாகூர் ஓடி வரவில்லை.
இதனால் மீண்டும் ரிஷப் பாண்ட் வருவதற்குள், அற்புதமாக பீல்டிங் செய்த மோயின் அலி, அந்த பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார், ஆனால் பந்தானது ஸ்டம்பில் படவில்லை.
அதே சமயம் அந்த பந்தை பிடித்த மற்றொரு பீல்டர் அகமது உடனே பிடித்து எறிந்திருந்தால் கூட அவுட் ஆகியிருக்கலாம், ஆனால் அவரும் பந்தை பிடிக்காமல் சொதப்ப, இதைக் கண்ட ஜோ ரூட் அப்படியே நொந்து போய்விட்டார்.
அதன் பின்னர் தற்போது வரை இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.