இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்: ஆளுங்கட்சிக்கு திகிலை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முடிவுகள்
இங்கிலாந்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் லிபரல் கட்சிக்கு திகிலை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.
திகிலை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முடிவுகள்
இங்கிலாந்தில், நேற்று, அதாவது, மே மாதம் 1ஆம் திகதி, 1,641 கவுன்சில் இருக்கைகளுக்கான தேர்தல், நடைபெற்றது.
இங்கிலாந்தின் 317 கவுன்சில்களில் 24 கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்றதுடன், ஆறு மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் நைஜலின் (Nigel Farage) Reform UK கட்சிக்கு சாதகமாக இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியபோது பலரும் அதை கேலி செய்தனர்.
Victory in Runcorn & Helsby proves we are now the opposition party to this Labour government.
— Nigel Farage MP (@Nigel_Farage) May 2, 2025
With this and other results tonight, it’s clear that if you vote Conservative you will get Labour.
But if you vote Reform, you get Reform.
ஆனால், கருத்துக்கணிப்புகள் மெய்யாகியுள்ளன. ஆம், லேபர் கட்சியிடமிருந்த The Runcorn and Helsby என்னும் முக்கியமான தொகுதியை அக்கட்சி Reform UK கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
நாங்கள்தான் இப்போது பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சி என்று நைஜல் பேட்டியே கொடுத்துவிட்டார்.
ஆக, Reform UK கட்சியின் வெற்றியால் ஆளுங்கட்சிக்குள் திகில் பரவியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக நீடிப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிப்பவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார் ஸ்டார்மர்.
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த தேர்தலில் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சில மாற்றங்களை எங்கள் கட்சி துவக்கவும் செய்தது.
ஆக, மக்கள் விரும்பும் மாற்றத்தை விரைவாக செய்ய தீர்மானம் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |