விவாத கருத்து... ஆசிய வம்சாவளி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட நிலை
சேன்ஸலர் Kwasi Kwarteng தொடர்பில் இனவாத கருத்தை தெரிவித்துள்ளார்.
சில மணி நேரங்களில் ரூபா ஹக் மீது தொழிலாளர் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானிய சேன்ஸலர் Kwasi Kwarteng தொடர்பில் விவாத கருத்தை முன்வைத்ததாக கூறி தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
சேன்ஸலர் Kwasi Kwarteng தொடர்பில் இனவாத கருத்தை தெரிவித்ததாக தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா ஹக் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு ஒன்றிலேயே அவர், சேன்ஸலர் Kwasi Kwarteng தொடர்பில் இனவாத கருத்தை தெரிவித்துள்ளார். சேன்ஸலர் Kwasi Kwarteng மேலோட்டமாக மட்டுமே கருப்பினத்தவர் என ரூபா ஹக் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
@PA
இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரங்களில் ரூபா ஹக் மீது தொழிலாளர் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, சேன்ஸலர் Kwasi Kwarteng-ஐ தொடர்புகொண்ட ரூபா ஹக், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kwasi Kwarteng பிரித்தானியாவின் முதல் கருப்பின சேன்ஸலர் ஆவார். கானாவில் பிறந்த இவர் தமது 13வது வயதில் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும், சேன்ஸலர் Kwasi Kwarteng மட்டுமின்றி, முன்னாள் சேன்ஸலர் ரிஷி சுனக்கையும் ரூபா ஹக் இன ரீதியாக விமர்சித்திருந்தார்.
முந்தைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் தற்போதைய வங்கதேசத்தில் பிறந்தவர்களான பெற்றோருக்கு பிரித்தானியாவில் பிறந்தவர் ரூபா ஹக் என்பது குறிப்பிடத்தக்கது.