காலால் மிதித்து.. நாவால் நக்கி ரஸ்க் தயாரிக்கும் இளைஞர்! வெளியான அதிர்ச்சி வீடியோ
தமிழகத்தின் ரஸ்க் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் ரஸ்க்குகளை நாவால் நக்கியும், காலால் மிதித்தும் பாக்கெட்டில் பேக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
காரைக்குடி பகுதியில் வடமாநில ஊழியர் ஒருவர் தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்குகளை கீழே கொட்டி காலால் மிதித்து அதை பாக்கெட்டில் அடைக்கும் போது நாவால் நக்கியும் அடுக்குகிறார்.
இதை பார்க்கும் பொழுது அவர் இந்த தவறை வேண்டுமென்றே செய்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவி வருவதையடுத்து நெட்டிசன்கள் அந்த ஊழியரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவரை கைது செய்ய கூறி பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அந்த பேக்கரியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது தரமற்ற, சுகாதாரமற்ற ரஸ்க்குகள் தயாரிக்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டி அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.