ரஸல், சேஸ் மிரட்டல் பந்துவீச்சில் சுருண்ட அமெரிக்கா
டி20 உலகக்கிண்ணத் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பார்படாஸில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 2 ரன்னில் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த நிதிஷ் குமார் 20 ஓட்டங்களில் மோட்டி ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ரஸல் மற்றும் ரஸ்டன் சேஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சில் அமெரிக்க அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் அந்த அணி 19.5 ஓவரில் 128 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரஸல், சேஸ் தலா 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோஸப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
4️⃣ down!? Keep going boys!??
— Windies Cricket (@windiescricket) June 22, 2024
Live Scorecard⬇️https://t.co/T4IRRZKgUE#WIREADY | #T20WorldCup | #WIvUSA pic.twitter.com/Ii2QjIh0II
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |