மிடில் ஸ்டம்பில் பந்து பட்டும் இப்படி போச்சே! தலையில் கையை வைத்த கீப்பர்: வைரலாகும் ரசுல் வீடியோ
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஸ் லீக் தொடரில், ஆண்ட்ரே ரசுல் அதிர்ஷ்டவசமாக அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, அவுஸ்திரேலியாவில் Big Bash League (BBL) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதன் படி இந்தாண்டிற்கான இந்த தொடர், கடந்த 5-ஆம் திகதி முதல் துவங்கியது.
அதன் படி கடந்த 12-ஆம் திகதி கிறிஸ் கிரின் தலைமையிலான Sydney Thunder அணியும், மேக்ஸ்வேல் தலைமையிலான Melbourne Stars அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய Melbourne Stars அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுக்க, அதன் பின் ஆடிய Sydney Thunder அணி, 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
That was a ROLLERCOASTER of an over for DreRuss #BBL11 pic.twitter.com/kobkADByEG
— KFC Big Bash League (@BBL) December 12, 2021
குறிப்பாக இந்த ஆட்டத்தில், Melbourne Stars அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசுல் 21 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், இவர் ஆட்டத்தின் 14.6-வது பந்தை வீசிய, சுழற்பந்து வீச்சாளர் Tanveer Sangha பந்தை அடித்து ஆட முயன்றார்.
ஆனால், பந்தானது அவரது பேட் மற்றும் கால்காப்பில் பட்டு, அப்படியே ஸ்டம்பில் பட்டது. ஆனால், ஸ்டம்பில் இருந்த பைஸ் கீழே விழாத காரணத்தினால், ரசுல் அவுட்டில் இருந்து தப்பினர். அப்போது ரசுல் 15 பந்தில் 33 ஓட்டங்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.