ஜேர்மனியில் AfD கட்சி வெற்றி பெற்றது இதனால்தான்... ரஷ்ய தரப்பு கருத்து
AfD's victory in Germany due in large part to lack of cheap Russian gas: ஜேர்மனி ரஷ்ய எரிவாயுவை வாங்காததுதான் ஜேர்மனியில் AfD கட்சி வெற்றி பெறக் காரணம் என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் தீவிர வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

ரஷ்ய தரப்பு கருத்து
இந்நிலையில், ஜேர்மனி ரஷ்ய எரிவாயுவை வாங்காததுதான் ஜேர்மனியில் AfD கட்சி வெற்றி பெறக் காரணம் என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா விலை மலிவாக எரிவாயுவைக் கொடுக்கும் நிலையிலும், ரஷ்ய எரிவாயுவை வாங்காமல், விலை அதிகமான அமெரிக்க எரிவாயுவை ஜேர்மனி வாங்குவதாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov கூறியுள்ளார்.

இப்படி விலை மலிவான ரஷ்ய எரிவாயுவை வாங்காமல், பல மடங்கு விலை அதிகமான அமெரிக்கா போன்ற நாடுகளிடம் ஜேர்மனி எரிவாயு வாங்குவதை, ஜேர்மானியர்களில் கொஞ்சம் பேராவது விரும்பவில்லை என்கிறார் அவர்.
ஆகவே, இந்த நிலையை மாற்ற, இப்போதிருக்கும் ஆட்சியாளர்களுக்கு மாற்றாக வேறு ஆட்சியாளர்கள் வேண்டும் என மக்கள் நினைத்ததாலேயே அவர்கள் AfD கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov.