உக்ரைன் போரில் உணவை ஆயுதமாக்கி உலக நாடுகளை அவதிக்குள்ளாக்கும் ரஷ்யா! பிரித்தானியா குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா உணவை ஆயுதமாக்குவதாக பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, உணவு போக்குவரத்திற்காக உக்ரைனில் உள்ள துறைமுகஙக்ளை மீண்டும் திறக்குமாறு புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, உக்ரைன் போரில் ரஷ்யா உணவை ஆயுதமாக்குவதாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இதன் விளைவாக உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
உலகில் பெரியளவில் தானியங்கள் தயாரிக்கும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று. போருக்கு முன் அதன் பொருபாலான தானியங்களை துறைமுகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரஷ்யா உணவை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், உலகளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான தானியங்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியது.
பிரபல ஐரோப்பிய நாட்டில் கத்திக்குத்து தாக்குதல்! மர்ம நபர் வெறிச்செயல்
இதனிடையே, உணவு விநியோக போக்குவரத்திற்கு உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என நேற்று ஐ.நா ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்தது.
பொருளாதார தடைகளை நீக்கினால் துறைமுகங்களை திறப்பது குறித்து பரிசீலிப்பதாக ரஷ்யா பதிலளித்துள்ளது.