சுவிஸில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள்..முதல் முறையாக ஐரோப்பிய நாட்டில் பேச்சுவார்த்தை
ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தூதுக்குழு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) திங்கட்கிழமை இரவு, தனது தூதுக்குழு சுவிட்சர்லாந்திற்கு வந்து பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வருவதாகக் கூறினார்.

அதேபோல் ரஷ்யாவின் டிமிட்ரி பெஸ்கோவ், "சுவிட்சர்லாந்தில் உள்ள ரஷ்ய பிரதிநிதிகள் பிரதேசங்கள் மற்றும் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுடன் தொடர்புடைய மற்ற அனைத்து தொடர்புடைய முக்கிய பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்" என்றார்.
இந்த நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்துள்ளனர்.
மூத்த அதிகாரிகள்
ஜெனீவாவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் சந்திக்க தயாராகி வருகின்றனர்.
ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமை தாங்குகிறார். GRU இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவரான அட்மிரல் இகோர் கோஸ்ட்யுகோவ் அவருடன் இணைவார். மொத்தம் இரண்டு டசின் அதிகாரிகள் தூதுக்குழுவில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் தேசிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ருஸ்டம் உமேரோவ், மீண்டும் தலைமை பேச்சுவார்தையாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் துருக்கியில் முந்தைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஒரு ஐரோப்பிய நாட்டில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |