ஜேர்மனியின் 20க்கும் மேற்பட்ட தூதர்களை வெளியேற்றுவதாக அறிவித்த ரஷ்யா! நட்புறவை பெர்லின் அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு
ரஷ்ய தூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஜேர்மனி தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜேர்மனி - ரஷ்யா உறவு
ஜேர்மனி பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் ஆழமான பொருளாதார உறவுகளை பராமரித்து வந்தது. குறிப்பாக ரஷ்ய எரிவாயு பரிமாற்றத்தில் இருநாடுகளும் நல்ல உறவில் இருந்தன.
@AFP
ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இரு நாடுகளில் உறவுகள் மோசமடைந்தது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 40 ரஷ்ய தூதர்களை ஜேர்மனி வெளியேற்றியது.
தூதர்களை வெளியேற்றும் ஜேர்மனி
இந்த நிலையில் ஜேர்மனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட ஜேர்மன் தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
@AFP
மேலும், பெர்லின் நட்புறவை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டும் ரஷ்யா, அந்நாட்டின் விரோத நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த முடிவை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
@Reuters