ஜேர்மன் குடிமகன் ஒருவரை கைது செய்துள்ள ரஷ்யா: நாசவேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
நாசவேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜேர்மானியர் ஒருவர், ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன் குடிமகன் ஒருவரை கைது செய்துள்ள ரஷ்யா
ஜேர்மன் குடிமகன் ஒருவர் நாசவேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய மாகாணமான Kaliningradஇலுள்ள எரிவாயு விநியோக மையம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி அவரை ரஷ்ய பொலிசார் கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அந்த 57 வயது ஜேர்மானியர், உள்ளூர் ஆற்றல் கட்டமைப்பில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பில் ரஷ்யாவுக்குச் சென்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Hamburgஇல் வாழும் அவர், Kaliningrad எல்லையில் காரில் பயணிக்கும்போது அவரது காரை ரஷ்ய பொலிசார் சோதனையிட்டதாகவும் அப்போது அவரது காரில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |