இது ஐரோப்பாவிற்கு பேரழிவு: உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு போரிஸ் ஜான்சன் கண்டனம்
உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இது ஐரோப்பாவிற்கு பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது சக G7 நாடுகளின் தலைவர்களுடன் பேச இருப்பதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் நேட்டோ நாடுகளின் தலைவர்களுடனும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று காலை உக்ரைன் நாட்டு அதிபர் Volodymyr Zelenskyயுடன் தொலைபேசியில் பேசிய போரிஸ் ஜான்சன், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான திடீர் தாக்குதல் மூலம், இரத்தம் சிந்துதல் மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்திருந்தார் அவர்.
லேபர் கட்சித் தலைவரான Sir Keir Starmer, உக்ரைன் மீதான புடினின் தாக்குதல், உலகம் முழுவதிலும், உலக வரலாற்றிலும், பயங்கர மற்றும் துயர விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளதோடு, ரஷ்யா மீது முடிந்த அளவுக்கு கடினமான தடைகளை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.