பிரதமரை குறிவைத்த நடத்தப்பட்ட தாக்குதல்., பின்னணியில் ரஷ்யா
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் வீட்டிற்கு தீவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் ரஷ்யாவின் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளின் ஒரு பகுதி என பிபிசி வெளிப்படுத்தியுள்ளது.
லண்டனில் வசித்த 22 வயது உக்ரைனியர் ரோமன் லாவ்ரினோவிச் (Roman Lavrynovych), பிரதமரின் வீட்டில் தீவைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரை “EL” என அழைக்கப்படும் ரஷ்ய தூதரகத்துடன் தொடர்புடைய நபர் வழிநடத்தியதாக பிபிசி கண்டறிந்துள்ளது.
உக்ரேனிய இளைஞருக்கு ரஷ்ய குடியுரிமையும் பணமும் வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தீவைத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டெலிகிராம் வழியாக நடத்தப்பட்ட சதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கூறப்படுகிறது.
ரஷ்யா, போலியான வலதுசாரி மற்றும் முஸ்லிம் குழுக்களை உருவாக்கி, பிரித்தானியாவில் மதவெறி மற்றும் சமூக பிளவை தூண்ட முயன்றதாக அறிக்கை கூறுகிறது.
“Direct Action UK” என்ற போலி அமைப்பின் மூலம், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிகளில் இஸ்லாமிய விரோதக் கோஷங்கள் எழுதப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரஷ்யாவின் “தகவல் போர்” திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக பிபிசி கண்டறிந்துள்ளது.
EL என அடையாளம் காணப்பட்ட எவ்ஜெனீ லியூக்ஷின் (Evgeny Lyukshin), ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்புடையவர் என்றும், புடின் ஆதரவாளராகவும் செயல்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள், இந்த தாக்குதல்கள் பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதாகவும், ரஷ்யாவின் நேரடி தலையீடு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |