விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம்
பிரெஞ்சு எல்லை பொலிஸார் தங்கள் ஊழியர்களில் ஒருவரை, விமான நிலையத்தில் தடுத்து வைத்ததை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்ட ரஷ்ய ஊழியர்
ரஷ்ய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர், பாரிஸ் விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ வேலைக்காக நாட்டிற்குள் நுழையும்போது தடுத்துவைக்கப்பட்டார்.
அவரது தொலைபேசி மற்றும் கணினியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக எந்த கருத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்திற்கு கண்டனத்தை தெரிவித்த ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பிரெஞ்சு தூதருக்கு சம்மன் மூலம் புகார் அனுப்பியது.
வெட்கக்கேடானது
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா கூறுகையில், "அவர் தடுத்து வைக்கப்பட்டதும், அவரது தொலைபேசி மற்றும் கணினி பறிமுதல் செய்யப்பட்டதும் வெட்கக்கேடானது.
ஏப்ரல் 6ஆம் திகதி சார்லஸ் டி கவுல்லே விமான நிலையத்தில் நடந்ததற்கு எந்த விளக்கமும் இல்லை. அவர் ரஷ்ய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக பயணம் செய்திருந்தார்.
மேலும் செல்லுபடியாகும் விசாவை வைத்திருந்தார். மாஸ்கோ கண்டனத்தை தெரிவித்து, பிரெஞ்சு வெளியுறவு தூதர் பதிலளிக்கும் விதமாக அழைப்பாணையை அனுப்பியது.
இதன் விளைவாக எங்கள் சக ஊழியர் இறுதியில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் விமான நிலையத்தின் எல்லை மண்டலத்தில் ஒரு நாளைக் கழிக்க வேண்டியிருந்தது. விளைவுகள் இல்லாமல் இதை விட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |