உக்ரைன் நெருக்கடியை பல மாதங்கள் இழுத்தடிப்பார் புடின்! ஏன்? போட்டுடைத்த பிரித்தானியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நெருக்கடியை பல மாதங்களாக இழுத்தடிக்ககூடும் என்று பிரித்தானியா வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் பிரச்னை தொடர்பில் Daily Telegraph செய்தித்தாளில் லிஸ் ட்ரஸ் எழுதியதாவது, தற்போதைக்கு உக்ரைனுக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறுவதற்கான எந்தவித ஆதராரமும் இல்லை.
ரஷ்ய இராணுவக் குவிப்பு குறைவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமைக்கு சவால் விடும் வகையில் இன்னும் பல மாதங்கள் உக்ரைன் பிரச்னையை ரஷ்யா இழுத்தடிக்ககூடும் என பிரித்தானியா வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, படையெடுப்பிற்கு ரஷ்யா தொடர்ந்து தயாராகி வருவதாகவும், பெலாரஸ்-உக்ரைன் எல்லைக்கு அருகே பிரிபியாட் ஆற்றின் குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்கு hysteria மற்றும் Russophobia பிடித்துள்ளதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.
மேலும், உக்ரைன் மீது உடனடியாக படையெடுக்கக்கூடும் என அமெரிக்க பாதுகாப்பு தலைவர்களின் கூற்றுக்களை ரஷ்யா கேலி செய்துள்ளது.