கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா
மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஜனவரி - நவம்பர் காலகட்டத்தில் எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி 1.016 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்தியுள்ளது.
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா
உக்ரைன் மீதான போரின் காரணமாக, டிசம்பர் 2024-ல் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்த ஐரோப்பாவிலிருந்து, எரிவாயு அல்லது புரோபேன் மற்றும் பியூட்டேன் விநியோகங்களை ரஷ்யா திசைதிருப்ப வேண்டியிருந்தது.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது முக்கியமாக கார்களுக்கு எரிபொருளாகவும், வெப்பமூட்டுவதற்கும், பிற பெட்ரோ கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ரஷ்யாவின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான விநியோகம் தற்போது சுமார் 36 சதவீதம் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
2024ல் இது 19 சதவீதமாகவே இருந்துள்ளது. இதில் அந்தப் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தான் மட்டுமே ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியின் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது.

முதல் நாடாக ரஷ்யா
ஜூலை மாதத்தில், ரஷ்யா ஆப்கானிஸ்தானின் புதிய தூதரின் நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், அந்த நாட்டின் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.
வெளியான தரவுகலின் அடிப்படையில், இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரும் எரிவாயு விநியோகம் 1.5 மடங்கு அதிகரித்து 418,000 டன்களாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானில் இருந்து வரும் விநியோகம் குறைந்ததன் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யாவின் எரிவாயு விநியோகம் ஓரளவு அதிகரித்துள்ளது என்றே வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |