‘கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’..! ரஷ்யாவுக்கு பிரித்தானியா பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா உடன் எல்லைகளை கொண்டுள்ளது, ரஷ்யாவுடன் சமூக மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளது.
இருப்பினும், உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை தூண்டுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கிழக்கு நோக்கி நேட்டோ படை விரிவாக்கம் மற்றும் அதன் எல்லைக்கு அருகில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு எதிராக உக்ரைன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரஷ்யா கோரியது.
இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், ஆனால் அதை ரஷ்யா மறுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss எச்சரித்துள்ளார்.
இந்த வார இறுதியில் லிவர்பூலில் நடைபெறவிருக்கும் ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஒற்றுமையைக் வெளிகாட்டும் மற்றும் ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ‘தவறு’ என்பதை தெளிவுப்படுத்தும்.
பிரித்தானியாவும் அதன் நட்பு நாடுகளும், உக்ரைன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையிலிருந்து ரஷ்யாவைத் தடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டில் G7 முற்றிலும் உறுதியாக இருக்கும்.
ரஷ்யா அந்த நடவடிக்கையை எடுத்தால், இது ஒரு தவறு மற்றும் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss எச்சரிக்கை விடுத்துள்ளார்.