யூடியூப்பில் உக்ரைன் போர் குறித்து தவறான தகவல்; கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அபராதம்
உக்ரைன் போர் குறித்த தவறான தகவல்கள் அடங்கிய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்துக்கு 3 மில்லியன் ரூபிள் (சுமார் ரூ.26.6 லட்சம்) அபராதம் விதித்தது.
காணொளியில் பொய்யான தகவல்கள் இருந்ததால், அதை நீக்குமாறு கூறியும், அவ்வாறு செய்யவில்லை என, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Google/Youtube
இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளை மீதும் இதேபோன்ற வழக்கில் வழக்குத் தொடரப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத அமைப்புகளை அணுகுவதற்கு சிறார்களை அனுமதிப்பதாக கூகுள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், எந்த வகையான அமைப்பு என விளக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Russia fines Google, youtube Videos on Ukraine russia war, Ukraine War, Google Youtube, fine on Google