ஹிட்லரைப்போல மாறிவரும் ஜேர்மன் தலைவர்கள்... ரஷ்யா கடும் விமர்சனம்
ஜேர்மன் தலைவர்கள் ஹிட்லரின் கொள்கைகளைத் தொடர்வதாகவும், ஜேர்மனி மீண்டும் நாஸியுக ஜேர்மனி போல மாறிவருவதாகவும் ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
விமர்சனத்துக்கான காரணம்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகரித்துவருகின்றன.
ஜேர்மனியும் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆகவேதான் ஜேர்மனியின் ராணுவமயமாக்கலை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov, ஜேர்மனியின் ராணுவமயமாக்கல் வெறும் ராணுவமயமாக்கல் அல்ல, அதன் பின்னால் ஜேர்மனியை மீண்டும் நாஸியுகமாக்கும் அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன என்று கூறியுள்ளார்.
எதற்காக அப்படிச் செய்யப்படுகிறது என்று கேட்ட Sergey Lavrov, சொல்லப்போனால், சோவியத் யூனியன் மீது மூலோபாய தோல்வியை ஏற்படுத்தி, ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமிக்க நினைத்த ஹிட்லரின் இலக்குகளைப்போல்தான் ஜேர்மனியின் இலக்குகளும் உள்ளன எனலாம் என்கிறார்.
ஹிட்லர் சோவியத் யூனியன் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பியதுபோல், நவயுக ஜேர்மனியும், அதற்கு பின்னால் ஆதரவுக் குரல் கொடுத்துவரும் ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோ அமைப்பும், ரஷ்யா மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன என்றும் கூறியுள்ளார் Sergey Lavrov.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |