ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு என்பதெல்லாம் பொய்யா? பிரான்ஸின் குட்டு வெளியானது
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது.
ஆஹா, நமக்கு ஐரோப்பாவே ஆதரவு என புழகாங்கிதம் அடைந்தது உக்ரைன்! ஆனால், திரை மறைவில் நடந்த ஒரு விடயம் இப்போது வெளியாகி, எல்லாமே நாடகமா என கேட்க வைத்துள்ளது.
பிரான்ஸின் குட்டு வெளியானது
ஆம், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
பிரான்சைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு ரஷ்யாவிடம் வாங்கிய எரிவாயுவை விட, இந்த ஆண்டு 7 சதவிகிதம் அதிக எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.
அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், பெல்ஜியம் நாட்டுக்கு பிரான்ஸ் எரிவாயு ஏற்றுமதி செய்துள்ளது. அதில் எவ்வளவு எரிவாயு ரஷ்யாவிடமிருந்து வாங்கியது என்பது தெரியவில்லை.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், பிரான்ஸ், பெல்ஜியத்துக்கு 10 சதவிகிதம் கூடுதலாக எரிவாயு ஏற்றுமதி செய்துள்ளது. ஆக, ரஷ்ய எரிவாயு மூலம் பண லாபமும் பார்த்துள்ளது பிரான்ஸ்.
விடயம் வெளியானதும், ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய எரிவாயு இறக்குமதியை தடை செய்வதால், ஆற்றல் கட்டணம் எக்கச்சக்கமாக உயர்ந்துவிடும் என்றும், தொழிற்சாலைகள் எரிவாயு இல்லாமல் பாதிக்கப்படும் என்றும் காரணம் கூறியுள்ளன.
ஆக மொத்தத்தில், ஒரு பக்கம் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டே, திரைமறைவில் பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகள் நடத்தும் போலி நாடகத்தை, தொண்டு நிறுவனம் ஒன்று வெளிக்கொணர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |