உக்ரைன் போருக்கு எதிராக குவியும் ஆதரவு! சமாளிக்க முடியாமல் அஞ்சிய ரஷ்யா செய்துள்ள காரியம்
உக்ரைன் - ரஷ்யா போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்கள் மீது மும்முனை தாக்குதலை கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த போரில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமான கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து சேதமானது. இந்த தாக்குதலை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகின்றன.
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களை எதிர்கொள்ள அஞ்சி ரஷ்யா இப்படி செய்வதாக பரவலாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.