ரஷ்யா உருவாக்கிய முதல் ஸ்மார்ட்போன் R-FON: டெவலப்பர்கள் வழங்கியுள்ள உறுதி
உள்நாட்டின் OS-ல் வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் குறித்த தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
முதல் உள்நாட்டு ஸ்மார்ட்போன்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தரவுகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவித்து ரஷ்ய அரசு அதிகாரிகள் யாரும் ஐ போன்களை பயன்படுத்த கூடாது என சமீபத்தில் ரஷ்யா தடை விதித்தது.
இந்நிலையில் உள்நாட்டில் OS-ல் வடிவமைக்கப்பட்ட Rosa என்ற முதல் ஸ்மார்ட்போனை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
Russia has introduced the first smartphone on the domestic OS "Rosa-mobile". The gadget was named R-FON (Р-ФОН)
— NEXTA (@nexta_tv) August 17, 2023
The developers promise to enter the market next year. State customers will be able to get it already this year.
According to the developers, the R-FON will bear the… pic.twitter.com/ljbqDpL6No
ரஷ்யாவால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு R-FON (Р-ФОН) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல்
டெவலபர்களின் தகவல்படி, இந்த R-FON (Р-ФОН) ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது, ஆனால் இதில் உள்ள சில பாகங்கள் மட்டும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் விற்பனை சந்தைக்கு வரும் என்று டெவலப்பர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆனால் மாகாண வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டிற்குள் ஸ்மார்ட்போனை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |