ரஷ்யாதான் உக்ரைனை ஊடுருவியது: அந்தர் பல்டி அடித்தார் ட்ரம்ப்
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில் தொடர்ந்து உக்ரைனை குறை கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது கூற்றை தலைகீழாக மாற்றிவிட்டார்.
ரஷ்யாதான் உக்ரைனை ஊடுருவியது
ஆம், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்ப்.
உக்ரைன், போரைத் துவக்கியிருக்கக்கூடாது என செவ்வாய்க்கிழமையன்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அதைத் தொடர்ந்து திடீரென மாற்றிப் பேசத் துவங்கியுள்ளார் ட்ரம்ப்.
நேற்று பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், புடினுடைய உத்தரவின்பேரில் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜோ பைடனும் போரைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அவர்கள், உக்ரைனைத் தாக்க புடினை அனுமதித்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |