இமானுவல் மேக்ரானுக்கு ரஷ்யா குட்டு: வரலாற்றை மறக்கவேண்டாம் என அறிவுறுத்தல்...
உக்ரைன் போரில், ரஷ்யா தோற்கவேண்டும் என கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, வரலாற்றை நினைவுபடுத்தி, குட்டு வைத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா தோற்கவேண்டும்
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதே நேரத்தில், ரஷ்யாவை அதன் மண்ணிலேயே நசுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எப்போதுமே பிரான்சுக்கு இருந்ததில்லை என்றும் கூறியிருந்தார் மேக்ரான்.
ரஷ்யா வைத்த குட்டு
மேக்ரானின் கூற்றுக்கு பதிலளித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova, மேக்ரான் ரஷ்யாவை அதன் மண்ணிலேயே நசுக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எப்போதுமே பிரான்சுக்கு இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் ‘எப்போதுமே’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் என்பது மேக்ரானில் துவங்கவில்லை, நெப்போலியனின் உடல் இன்னமும் பாரீஸின் மையப்பகுதியில் இருப்பதை மறக்கவேண்டாம் என்னும் பொருளில் பேசி மேக்ரானுக்கு ஒரு குட்டு வைத்துள்ளார்.
அதன் பொருள் என்னவென்றால், பேரரசர் நெப்போலியன் பிரான்சை ஆண்டபோது, 1812ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குள் ஊடுருவினார். எளிதாக ரஷ்யாவை தோற்கடித்துவிடலாம் என அவர் போட்ட திட்டம் தோற்று, அந்தப் போருக்கு தான் அனுப்பிய 600,000 போர் வீரர்களில் 500,000 பேரை சாகக் கொடுத்தார் அவர்.
அதைத்தான் இப்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova நினைவுகூர்ந்து, மேக்ரான் வரலாற்றை மறக்கவேண்டாம் என குத்திக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Photo via Wikimedia Commons